இங்க எதாச்சும் எழுதி ரொம்ப நாளாச்சி. அது ஒண்ணுமில்லீங்க கால் கட்டு போட்டுகிட்டேன். ஆஸ்பித்திரி போய் போடற கட்டு இல்லீங்க. இது வேற கால் கட்டு. ஹீஹீ.
Assembly, C, C++, Java, C# இப்படி என்ன language-ல வேணும்னாலும் program குடுங்க, எவ்வளவு complex-ஆ இருந்தாலும் சும்மா பின்னி எடுத்துடுவேன். ஆனா இந்த பொண்ணுங்க பேசறதுல ஒரு lineக்கு அர்த்தம் கேளுங்க, பேந்த பேந்த முழிப்பேன். அது என்னமோ போங்க, இந்த பொண்ணுங்களுக்கு எதையும் நேரா சொல்ல தெரியாது. எதாச்சும் சொல்லிபுட்டு அப்புறம் அது நமக்கு புரியலைன்னு சொன்னா மொகட்டுலயே ஒரு குத்து வேற. ஒரு பொண்ணு 'இது' சொன்னா 'அது' அர்த்தம்னு யாராச்சும் பெண்கள் அகராதின்னு ஒண்ணு எழுதினா எவ்வளவு நல்லா இருக்கும்?
கலிங்கத்துப் பரணில செயங்கொண்டார் இத அழகா சொல்லறார்:
'விடுமின் எங்கள்துகில்! விடுமின்!' என்று முனி
வெகுளி மென்குதலை 'துகிலைப்
பிடிமின்' என்ற பொருள் விளைய நின்றருள்செய்
பெடைந லீர்! கடைகள் திறமினோ!
விளக்கம்:
கணவன் உங்கள் ஆடையை பற்றி இழுக்கையில், விடுங்கள், விடுங்கள் என்று நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தம், 'இழுங்கள் இழுங்கள்' என்பதே. இப்படி பொய்க்கோபம் காட்டும் பெண்களே கதவுகளை திறங்கள்.
இதயே ஷாஜகான் படத்துல, 'போ, போ, போ என்று சொல்லுக்கு வா, வா, வா என்று அர்த்தமே'-ன்னு ரொம்ப சிம்பிளா 'மே மாத மேகம்' பாட்டுல சொல்றாங்க!