நான் ரசித்த சில கவிதைகள்

ரொம்ப நாளாவே என்னோட மனசுல ஒரு சின்ன நெனப்பு ஓடிகிட்டு இருக்கு. பழைய தமிழ் பாடல்களை கொஞ்சம் புரியற மாதிரி explain செய்யலாம்னு. முடிஞ்ச வரை try பண்ணலாம்னு நினைச்சேன். அதோட விளைவு தான் இந்த blog.

Sunday, October 09, 2005

ஊரு விட்டு ஊரு வந்து ...

பெங்களூர் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். அதை பெண்களுர் அப்டின்னு கூட செல்லமா சொல்லுவோம்ங்க. சென்னைல வேலை கிடைகறதுக்கு முன்னாடி கிட்ட தட்ட ஒரு 6 மாசம் அங்க தான் தங்கி இருந்தேன். என்னமொ தெரியல எனக்கு அந்த இடம் ரொம்ப பிடிச்சி போச்சுங்க. இப்பொ 3 வருசம் சென்னைல இருந்திட்டு திரும்பவும் அங்க போக போறேன். ஒரு ஊருன்ன என்ன இருக்கணும்? இதுக்கு பொதுவான பதில் கிடையாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி தோணும். climate நல்லா இருக்கனும்; நெறைய shopping complex இருக்கனும்; குண்டும் குழியும் இல்லாத road இருக்கனும்; பக்கத்துல picnic போற மாதிரி நெறைய இடம் இருக்கனும் - இது எனக்கு. இந்த மாதிரி, குற்றால குறவஞ்சியில, குறத்தி அவளோட நாட்டை பத்தி சொல்லுறதை கேளுங்க:



நீங்க காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்க காண்பது கன்னலிற் சென்னெல்
தொங்க காண்பது மாம்பழ கொத்து
சுழல காண்பது பூந்தயிர் மத்து
வீங்க காண்பது மங்கயர் கொங்கை
வெடிக்க காண்பது கொல்லையின் முல்லை
ஓங்க காண்பது மங்கல பேரிகை
ஈசர் ஆரிய நாடெங்கள் நாடே


விளக்கம்:

ஈசரோட எங்க நாட்டுல கரும்பும் நெல்லும் அடர்த்தியா வளர்ந்திருக்கும்; மாம்பழம் கொத்து கொத்தா காச்சிருக்கும்; தயிர் மத்து சுத்திகிட்டு இருக்கும்; பெண்களின் மார்பு பெரிசா இருக்கும்; கொல்லைபுறத்துல முல்லை பூ பூத்து வெடிச்சு கிடக்கும்; மஙகலமான பேரிகை சத்தம் நல்லா பலமா கேக்கும். மொத்தத்துல எஙக நாட்டுக்கு வந்து சேர்ந்தவஙலோட பாவம் நீங்கி போகும்.