நான் ரசித்த சில கவிதைகள்

ரொம்ப நாளாவே என்னோட மனசுல ஒரு சின்ன நெனப்பு ஓடிகிட்டு இருக்கு. பழைய தமிழ் பாடல்களை கொஞ்சம் புரியற மாதிரி explain செய்யலாம்னு. முடிஞ்ச வரை try பண்ணலாம்னு நினைச்சேன். அதோட விளைவு தான் இந்த blog.

Sunday, November 20, 2005

மரமும் யானையும்

போன வாரம் எங்க டீம்ல பசங்க சேர்ந்து ஆபீசுக்கு பக்கதுல ஒரு கடைல காபி குடிக்க போயிருந்தோம். பக்கதுல ஒரு கடைல ஒரு அழகான வாட்ச் வெச்சு இருந்தாங்க. பீர் பாட்டில் மாதிரி ஒரு ஷேப்ல இருந்துச்சு. பசங்க அதை பார்ததும் இது என்னான்னு தெரியுதான்னு கேட்டாங்க. பீர் பாட்டில்ன்னு சொன்னேன். சிரிச்சுகிட்டே பசங்க சொன்னானுக, 'எங்களுக்கு அதுல ஒரு வாட்ச் தெரியுது, உனக்கு அங்க ஒரு பீர் பாட்டில் தெரியுது. எல்லாம் பாக்கறவங்க கண்ணை பொறுத்துதான்'. யோசிச்சு பார்த்தா எவ்வளவு சரின்னு புரியுது. நம்ம அத பீர் பாட்டில்ன்னு பார்தா அதுல இருக்கற வாட்சோட அழகு தெரியாது. அத வாட்ச்ன்னு பார்த்தா அதுல இருக்கற பீர் பாட்டில் தெரியாது. இதயே தான் திருமூலர் திருமந்திரம்ல சொல்லறார்:


மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்


விளக்கம்:

யானை சிலை ஒண்ணு ரொம்ப தத்ரூபமா மரத்துல செஞ்சு வெச்சிருக்காங்க. அதை மரம்ன்னு பார்த்தா அதுல இருக்குற யானை தெரியாது, அதை யானைன்னு பார்க்கும் போது அதுல மரம் தெரியாது. யானை வேற மரம் வேற இல்ல. ரெண்டும் ஒண்ணுதான்; பார்கறவங்க கண்ணை பொறுத்து தான் எல்லாமே. பஞ்ச பூதங்கலால ஆன இந்த உலகமும், பரமாத்மாவும் அப்படிதான். பார்கறவங்க கண்ணுக்கு எப்படி தெரிந்தாலும் அது ரெண்டும் ஒண்ணு தான்

0 Comments:

Post a Comment

<< Home