நான் ரசித்த சில கவிதைகள்

ரொம்ப நாளாவே என்னோட மனசுல ஒரு சின்ன நெனப்பு ஓடிகிட்டு இருக்கு. பழைய தமிழ் பாடல்களை கொஞ்சம் புரியற மாதிரி explain செய்யலாம்னு. முடிஞ்ச வரை try பண்ணலாம்னு நினைச்சேன். அதோட விளைவு தான் இந்த blog.

Friday, September 02, 2005

மாற்றம்

Englishல ஒரு நல்ல பழமொழி இருக்குங்க. 'Change is the only thing remains constant' அப்படின்னு. யோசிச்சு பார்த்தா அது எவ்வளவு உண்மைன்னு தெரியும். நம்ம ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலயும் எவ்வளவு மாற்றம்? நான் எல்லாம் சின்ன வயசில படுத்தா போதும், தூக்கம் சொக்கிட்டு வரும். night 9 மணி ஆனா போதும், படுக்க கூட வேண்டாம், அப்படியே தூங்கிடுவேன். இப்போ எல்லாம் அப்படியே opposite. ராத்திரி எப்படியும் படுக்க 1 மணி ஆயிடும். அப்புறம் சூரியன் FM. 'கேளுங்க, கேளுங்க கேட்டுகிட்டே இருங்க' தான். தூங்க போக 2/3 மணி ஆயிடும். சாதரண தூக்கத்துக்கே இப்படி ஒரு changeன்னா மத்த விசயத்துல கேட்கவே வேனாம். சின்ன வயசில ஒருத்தன் நடந்துக்கறத வெச்சு, அவன் பெரியவனானதும், இப்படி தான் இருப்பான்னு சொல்லறது கொஞ்சம் கஷ்டம். இல்ல, இல்ல ரொம்பவே கஷ்டம். இத புறநானூறுல ரொம்ப அழகா சொல்லி இருக்காரு, பொன் முடியார்.


பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாது ஒச்சிய சிறு கோல் அஞ்சியோடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர் நிறம் கொன்ட களிரு அட்டு ஆனான்,
முன் நால் வீழிந்த உரவொர் மகனே,

உன்னிலன் என்னும், புண் ஒன்ட்று அம்பு -
மான் உலஈ அன்ன குடுமி
தோல் மிசை கிடந்த புல் அணலோணே.


விளக்கம்:
சின்ன வயசுல, பயல் 'பால குடி'-இன்னு சொன்ன மாட்டேன்னு குறும்பு பண்ணுவான். ஒரு சின்ன குச்சிய காட்டி பயமுறுத்தினாலே பயந்து குடிச்சிடுவான். இப்போ என்னடான்னா, பய சண்டைக்கு போயி யானை எல்லாம் கொன்னுட்டு வாரான். நெஞ்சுல ஒரு அம்பு குத்தி இருக்குடா-ன்னு சொன்னா, 'ஓ, அம்பா? நான் எதோ சின்ன புண்ணோன்னு நெனச்சு கவனிக்காம விட்டுடேன்' அப்படிங்கறான்!

0 Comments:

Post a Comment

<< Home